வெள்ளி, 11 டிசம்பர், 2009

சாமிவேலுவின் சண்டித்தனப் பேச்சுக்கு இன்றைய பேரணி பதில் சொல்லும்

ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடியாத ஓர் அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்வது ஜனநாயக நாட்டின் நடைமுறை. அந்த அமைச்சர் ராஜினாமா செய்யும் பட்சத்தில் ஒரு புதிய அமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டியது அதே அரசாங்கத்தின் பொறுப்பு. பொறுப்பிற்கு வரக்கூடிய புதிய அமைச்சர் அந்த்த் தீர்க்கப்படாத பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அமைச்சர் ராஜினாமா செய்த பிறகு இந்த இயக்கங்கள் இப்பிரச்சனைகளுக்கத் தீர்வு காண முடியுமா என்று சாமிவேலு கேட்பதில் இருந்து அவர் ஜனநாயக ஆட்சி முறையை அறியாதவர் என்பது புலப்படுகிறது, 30 ஆண்டுகள் அமைச்சரவையில் துணையமைச்சராகவும் முழு அமைச்சராகவும் பதவி வகித்து சமுதாயத்தின் தன்மானத்தை அடமானம் வைத்ததே சாமிவேலு செய்த மிகப் பெரிய சாதனை. மக்களாட்சி என்றால் என்னவென்றே தெரியாத ஒருவருக்கு நம்மைப் போன்றவர்கள் இன்னும் பதில் சொல்லி காலத்தை விரையமாக்க வேண்டியதைக் கண்டு வேதனை அடைகிறோம். நமக்கு ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

இன்று கூடப்போகும் மக்கள் பேரணி சாமிவேலுவிற்கு தக்கப் பதில் சொல்லும். மக்களை காலம் முழுவதும் அடிமையென நினைத்து தாம் சொல்வதையே வேத வாக்கென பறைசாற்றி வந்த சாமிவேலுவின் காலம் உண்மையில் முடிந்துவிட்டது. அவரின் கருத்துகளை சமுதாயம் பெரிதாக மதிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் சாமிவேலுவின் பேட்டி ஊடகங்களில் வெளியான பிறகு நாட்டு மக்கள் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை மஇகாவின் அடி மட்ட உறுப்பினர்களிடம் கேட்டே தெரிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் அவருக்கு ஆலோசனை கூறுகிறோம். அவருடைய பேட்டிகளும் பயன்படுத்தும் வார்த்தைகளும் மக்கள் மஇகாவை விட்டு விலகிச் செல்ல வழிகோல்கின்றன.

1 கருத்து:

  1. புதிய‌ ப‌ழ‌மொழி செய்வோம் " சாமிவேலு பேச்சு குப்பையில‌ போச்சு"

    அமைச்ச‌ராக‌ இருந்த‌ போது பாரிசான் அர‌சாங்க‌மும் மகாதீரும் ந‌ம் ச‌முதாய‌த்திற்கு அதை செய்தார்க‌ள் இதை செய்தார்க‌ள் என்றார். ம‌இகா மாநாடுக‌ளிலே ம‌காதீருக்கு மாலை அணிவித்து ம‌ரியாதை செய்தார். அதுவே தேர்த‌லில் தோல்வி அடைந்த‌தும் ம‌க்க‌ள் ம‌இகாவை வெறுத்த‌ற்கு கார‌ண‌ம் மகாதீரும் பாரிசானும் ந‌ம் ச‌முதாய‌திற்கு எதுவே செய்யாதுதான் கார‌ண‌ம் என்றார்.அன்றும் ச‌ரி இன்றும் ச‌ரி சாமிவேலு ந‌ல்ல‌ ந‌டிக‌ன்.

    பதிலளிநீக்கு