புதன், 16 டிசம்பர், 2009

பத்திரிகைச் செய்திகள்

எஸ்பிஎம் தமிழ், இல்க்கிய பாடங்கள் சம்பந்தப்பட்டுள்ள பத்திரிகைச் செய்திகளை இங்குத் தொகுத்துள்ளோம். இவற்றை தமிழ்த் திருத்தொண்டர் தமிழ் வாணன் நமக்கு அனுப்பியுள்ளார். இது போன்ற செய்திகள் உங்களிடம் இருந்தால், தயவு செய்து எங்கள் கவனத்திற்கு அனுப்பி வையுங்கள். மலாய், ஆங்கில, சீனப் பத்திரிகைச் செய்திகளையும் அனுப்பி வைக்கலாம். நமது போராட்டத்திற்கு விரோதமாகவும் சில செய்திகள் பத்திரிகையில் காணப்படுகின்றன. அவற்றை எங்களுக்கு அனுப்பி வைத்தால், பதில் எழுதுவதற்கு வசதியாக இருக்கும். நன்றி.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

கல்வியமைச்சருக்கு மகஜர்


12 பாட மீட்புக் குழுவின் தலைவர் திரு. ஆ.திருவேங்கடம்,  தங்கள் குழுவின்  கோரிக்கைகளை மகஜராகத் தயாரித்து மலேசிய கல்வியமைச்சர் முஹிடின் யாசிமிற்கு வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார். இன்று அக்குழு காலை 11.00 மணிக்கு புத்ரா ஜெயாவில் உள்ள அலுவலகத்தில் கல்வியமைச்சரைச் சந்திக்கவுள்ளது.

சனி, 12 டிசம்பர், 2009

மலேசிய இன்று அகப்பக்கத்தின் செய்தி

இன்று காலை நடைபெற்ற நமது பேரணி பற்றிய செய்தியை மலேசியா இன்று என்ற அகப்பக்கம் விரிவாகத் தருவித்துள்ளது. அதுபற்றிய செய்தியை பின்வரும் தொடுப்பில் காணலாம்...

http://www.malaysiaindru.com/?p=29167#comment-9163

வெள்ளி, 11 டிசம்பர், 2009

KENYATAAN PRESIDEN GPMS AMAT DANGGAL

Hari ini saya sempat baca tulisan En. Jais yang merupakan presiden GPMS di akhbar Kosmo. Menurutnya, peluang mengambil 12 mata pelajaran akan merugikan pelajar Melayu dan menguntungkan pelajar bukan Melayu.

Saya hairan bagaimana seorang presiden di peringkat kebangsaan boleh mengeluarkan kenyataan terburu-buru seperti ini. Sebagai seorang presiden beliau boleh membuat tuntutan untuk lebih banyak mata pelajaran dibenarkan kepada pelajar-pelajar Melayu jika ia mendapati sekatan kepada 10 mata pelajaran sahaja tidak mencukupi. Dalam era globelisasi yang mencabar dan memerlukan kemahiran teknologi maklumat yang tinggi, saya berpendapat pengiktirafan kepada 10 mata pelajaran sahaja tidak mencukupi. Oleh itu, En. Jais perlu fokuskan perjuangan persatuannya untuk membuat tuntutan kepada lebih banyak mata pelajaran.

Sebaliknya, meluahkan perasaan cempuru kepada tuntutan bukan Melayu hanya mendedahkan penjumudan fikiran beliau. Aspek-aspek yang meliputi proses pembelajaran hendaklah adil kepada semua pihak. Apabila timbang-tara condong ke pihak yang memerintah sahaja, ia akan memberi ancaman kepada keamanan yang dinikmati di negara ini.

En. Jais perlu fikir aspek kelonggaran yang diberi selama ini. Apabila kebebasan yang diberi selama ini ditarik balik, sudah tentu ia akan memberi kejutan kepada sesuatu pihak. Ambil contoh perlaksanaan dasar bahasa penghantar untuk subjek Matematik dan Sains yang masih dilaksanakan sekarang ini. Ia telah beri kejutan kepada banyak pihak. Pihak-pihak tersebut membantah perlaksanaan dasar itu. Apakah implikasinya? Begitu banyak perhimpunan, debat dan seumpamanya dianjurkan oleh pihak-pihak tersebut. Reaksi yang sama ditunjukkan oleh kami sekarang ini.

Apabila En. Jais memberi data berhubung peratusan pelajar yang mengambil mata pelajaran Bahasa Tamil dan Kesusasteraannya, ia secara langsung bercanggah dengan pendiriannya sendiri. Beliau berkata kurang dari satu peratus calon yang mengambil subjek-subjek ini. Andaikan bahawa data ini benar; maka timbul persoalan bagaimana peratusan yang sebegini kecil boleh memberi kesan negatif kepada pelajar-pelajar Melayu?

En. Jais perlu sedar bahawa tuntutan kami bukan tambahan kepada hak yang sedia ada. Ia hanya satu desakan untuk memulangkan balik apa yang dirampas. Katakan salah sebuah kerusi yang diduduki oleh ahli keluarga kamu diminta dikosongkan oleh pemandu bas. Apakah reaksi kamu sebagai ketua keluarga? Kamu akan membantah bukan? Itulah yang kami lakukan. Adakah itu salah?

Pendirian En. Jais hanya boleh diterima jika tiba-tiba kami mendesak kerajaan supaya menjadikan Bahasa Tamil sebagai bahasa rasmi di negara ini. Itu bukanlah apa yang kami tuntut. Ia sama seperti merampas kerusi keluarga lain yang sudah diduduki.

Dasar yang dilaksanakan oleh kerajaan dan komen En.Jais langsung tidak masuk akal apabila begitu banyak subjek ditawarkan dalam SPM tetapi sekatan dikenakan untuk 10 subjek sahaja. Kenapa perlu ada lebih 100 subjek peperiksaan, sedangkan hanya 10 subjek sahaja yang dibenarkan kepada calon sekolah. Ini hanysa sama seperti mengenakan catuan untuk menikmati sesuatu kekayaan sedangkan wujud tawaran yang begitu lumayan. Oleh itu, tuntutan kami secara tidak langsung akan memberi sumbangan kepada semua pihak di negara ini. Jadi, En. Jais sepatutnya menyokong perjuangan kami.

Dunia tidak akan menjadi gelab jika En. Jais seorang yang memejam mata. Walaupun  bahasa Tamil dianggap sebagai hak yang sensitif oleh masyarakat India, ia masih terbuka kepada semua calon Malaysia. Tidak sesiapa yang boleh melarang daripada mengambil mata pelajaran ini. Hakikatnya, sudah ada ramai belajar yang merentasi sempadan perkauman dan lulus dengan jayanya dalam mata pelajaran ini. Begitu juga tidak ada sekatan untuk Bukan Melayu daripada mengambil subjek-subjek seperti Tamadun Islam, Tasawuf, Usuludin dan sebagainya. Apa yang menjadi masalah sekarang ialah bilangan mata pelajaran yang diiktiraf oleh kerajaan kepada sesuatu calon.

Dengan itu, sebagai presiden bagi pertubuhan akademik, saya minta En. Jais menunjukkan kewibawaan sebagai seorang yang terdidik.

 

பதாகை 3


சாமிவேலுவின் சண்டித்தனப் பேச்சுக்கு இன்றைய பேரணி பதில் சொல்லும்

ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடியாத ஓர் அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்வது ஜனநாயக நாட்டின் நடைமுறை. அந்த அமைச்சர் ராஜினாமா செய்யும் பட்சத்தில் ஒரு புதிய அமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டியது அதே அரசாங்கத்தின் பொறுப்பு. பொறுப்பிற்கு வரக்கூடிய புதிய அமைச்சர் அந்த்த் தீர்க்கப்படாத பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அமைச்சர் ராஜினாமா செய்த பிறகு இந்த இயக்கங்கள் இப்பிரச்சனைகளுக்கத் தீர்வு காண முடியுமா என்று சாமிவேலு கேட்பதில் இருந்து அவர் ஜனநாயக ஆட்சி முறையை அறியாதவர் என்பது புலப்படுகிறது, 30 ஆண்டுகள் அமைச்சரவையில் துணையமைச்சராகவும் முழு அமைச்சராகவும் பதவி வகித்து சமுதாயத்தின் தன்மானத்தை அடமானம் வைத்ததே சாமிவேலு செய்த மிகப் பெரிய சாதனை. மக்களாட்சி என்றால் என்னவென்றே தெரியாத ஒருவருக்கு நம்மைப் போன்றவர்கள் இன்னும் பதில் சொல்லி காலத்தை விரையமாக்க வேண்டியதைக் கண்டு வேதனை அடைகிறோம். நமக்கு ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

இன்று கூடப்போகும் மக்கள் பேரணி சாமிவேலுவிற்கு தக்கப் பதில் சொல்லும். மக்களை காலம் முழுவதும் அடிமையென நினைத்து தாம் சொல்வதையே வேத வாக்கென பறைசாற்றி வந்த சாமிவேலுவின் காலம் உண்மையில் முடிந்துவிட்டது. அவரின் கருத்துகளை சமுதாயம் பெரிதாக மதிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் சாமிவேலுவின் பேட்டி ஊடகங்களில் வெளியான பிறகு நாட்டு மக்கள் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை மஇகாவின் அடி மட்ட உறுப்பினர்களிடம் கேட்டே தெரிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் அவருக்கு ஆலோசனை கூறுகிறோம். அவருடைய பேட்டிகளும் பயன்படுத்தும் வார்த்தைகளும் மக்கள் மஇகாவை விட்டு விலகிச் செல்ல வழிகோல்கின்றன.

வியாழன், 10 டிசம்பர், 2009

சிங்கமும் சிட்டும்

இறைவன் ஒரு காட்டை ஆண்டு வந்தார். காடு மிகவும் பெரிதாக இருந்ததால், அதைத் தனித் தனி பிரதேசங்களாகப் பிரித்து அந்தந்த பிரதேசத்தில் வாழும் பிராணிகளிடம் ஆட்சியை ஒப்படைத்தார். அந்தப் பிராணிகள் நாம் அனைவரும் ஒரே காட்டின் குடிமக்களாக வாழ்வோம் என்று நல்லிணக்கத்தோடு வாழத் தொடங்கின.

காலச் சக்கர சுழற்சி அரையுகத்தைக் கடந்து விட்டது. ஆட்சியை அமைத்த பிராணிகள் வயதாகி சில மடிந்தும் விட்டன. எனவே, அந்த காலியான இடங்களை அப்பிராணிகளின் வாரிசிகள் நிரப்பத் தொடங்கின. அந்த வாரிசுகளுக்குத் தங்கள் முதாதையர்களின் புரிந்துணர்வுக் கொள்கை அவ்வளவாக எடுபடவில்லை. எனவே, கொஞ்சங் கொஞ்சமாக அடுத்த பிராணிக் கூட்டங்களின் உரிமைகளைப் புரக்கணிக்கத் தொடங்கின.

இந்தப் பரிணாமத்தில் சிங்கங் குட்டிகள் சிட்டின் கூட்டத்திலும் சேர்ந்து விட்டன. அந்தச் சிட்டுகள் உண்பதைப் போலவே உண்ணவும் தொடங்கி விட்டன. காலப்போக்கில் அவை உணவுக் குறைவால் உடல் சிறுத்தும் விட்டன. உடலோடு சிந்தனையும் சிறுத்து விட்டது.

ஐயோ பரிதாபம். தாங்கள் சிங்கக் குட்டிகள் என்பதையே அவை மறந்து போயின. தாங்கள் புஷ்டியான மாமிச உணவை உண்டு உடலைப் பெருக்க வேண்டும் என்பதைக் கூட அவை அறியவில்லை.

ஆட்சியில் இருந்த பிராணிகளுக்கு 10 பங்கு உணவு போதுமானதாக இருந்தது. எனவே, 10 பங்கு உணவு போதும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. இது ஒரு சில சிங்கங்களுக்கு ஆத்திரத்தைக் கிழப்பி விட்டது. குறைந்தது 12 பங்கு உணவு உண்டால்தான் தங்கள் வம்சத்தைக் காக்க முடியும் என்று 12ம் தேதி 12ம் மாதம் பேரணிக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தன.

போகும் வழியில் ஒரு சிங்கம் சிட்டோடு சேர்ந்து விட்ட மற்றொரு உடல் சிறுத்துப் போன சிங்கத்தைச் சந்தித்து விட்டது. பழக்க தோஷத்தால் ஒன்றுக்கொன்று நலம் விசாரித்து பேசத் தொடங்கின.

முதல் சிங்கம் 12 பங்கு உணவு கேட்டு போராடப் போகிறோம் என்று சொன்னது.

10 பங்கு உணவு போதாதா? ஏன் பேராசைப் படுகிறீர்கள்? என்று சிட்டு குணம் தரித்த சிங்கம் கேட்டது.

அதற்குள் சிந்தனையால் சிங்கமாக வாழும் சிங்கங்களும் சிட்டாகச் சிறுத்துவிட்ட சிங்கங்களும் கூட்டம் கூடி விட்டன.

12 என்றன சிங்காரச் சிங்கங்கள்.

10 என்றன சிட்டாகிப் போன சிங்கங்கள்.

ஹா... ஹா... ஹா... பரிகாசச் சிரிப்பு தூரத்தில் இருந்து கேட்டது.

இதுதான் பரிணாமம். இப்போது பாதிக்குப் பாதி சிங்கங்கள் 10 பங்கு உணவு போதும் என்று கேட்கின்றன. இவர்கள் சண்டைக்கு மத்தியில் நாம் இன்னும் கொஞ்ச தந்திரங்களைப் பிரயோகிப்போம். இப்படியே போனால் நமது பரிணாமம் பூரணமாகி விடும் என்று கெக்கரித்தது. எவ்வளவுதான் அடக்கிக் கெக்கரித்தாலும் அந்தக் கர்வக் கெக்கரிப்பு கடாரம் முதல் கிழக்கு வரை கேட்கதான் செய்கிறது.

வெல்லப் போவது யாரு?

சிங்கமா - சிட்டா?

பேரணியின் பதாகைகள்

"தமிழைக் காப்போம், இலக்கியத்தை மீட்போம்" பேரணியின் தீர்மானங்கள்

எஸ்பிஎம் 12 பாட மீட்டெடுப்புக் குழு


சனிக்கிழமை, 12 டிசம்பர் 2009 தோட்ட மாளிகை
"தமிழைக் காப்போம், இலக்கியத்தை மீட்போம்" பேரணியின் தீர்மானங்கள்


1, மலேசிய அரசியலமைப்பு சட்டப்படி, கல்விச் சட்டத்தின் 152-வது அம்சத்தை நிலை நிறுத்த வேண்டும்.

வரைவு எண்:152
அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழி இருப்பினும் பிற மொழிகளுக்கான நிலைப்பாடு மற்றும் உரிமையைக் கொண்டு, அம்மொழியைப் பயன்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பொது மானியங்களைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் தடை ஒருபோதும் இருக்கக்கூடாது.

வரைவு எண்:152(1)(a)
பிற மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் (அதிகாரப்பூர்வ காரணங்களைத் தவிர்த்து), அல்லது கற்பிப்பதற்கும் கற்பதற்கும் யாரையும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது; மற்றும்
வரைவு எண்:152(1)(b)
கூட்டரசில் அங்கம் வகிக்கும் பல்லின மக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்வதற்கும், கற்பதற்கும் உரிய மத்திய, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரைவின் உட்பிரிவும் பாதிக்கலாகாது.


2, தாய் மொழியான தமிழ்க் கல்வி சம்பந்தப்பட்ட கொள்கைகளை அமலாக்குவதற்கு முன் சமூக இயக்கங்களையும் கல்வியாளர்களையும் அரசாங்கம் கலந்தாலோசிக்க வேண்டும்.


3, எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் எடுக்க அனுமதிக்கப்படும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல் முழு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்.

4, தமிழ் மொழியின் ஆய்விற்கும் வளர்ச்சிக்கும் நிலைத் தன்மைக்கும் அரசுசார் அமைப்பு ஒன்று அதிவிரைவில் முழு அரசாங்க நிதி உதவியோடு அமைக்கப்பட வேண்டும்.

5, நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழ் மொழிக்கு ஊறு விளைவிக்கும் எந்தவொரு தரப்பின் நடவடிக்கைகளையும் இப்பேரணி வன்மையாகக் கண்டிக்கிறது.


கையெழுத்து Signature: ___________________

பெயர் Name: ___________________

அ,கா,எண் I.C. No ___________________

முகவரி Address __________________________________________________________________
__________________________________________________________________


செம்மொழி தமிழ் வாழ்க

புதன், 9 டிசம்பர், 2009

அபாயம் - 12 பாட கோரிக்கை

நாடு முழுவதும் பல இந்திய அமைப்புகள் எஸ்பிஎம் சோதனையில் மாணவர்கள் 12 பாடங்கள் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பு வருகின்றன.

இதில் ஓர் அபாயம் இருப்பதை நாம் உணர வேண்டும்.

நமது அரசாங்கம் தந்திர குணம் உடையது என்பதை நாம் உணர வேண்டும்.

12 பாட கோரிக்கையை நிறைவேற்றுவது போல் நிறைவேற்றி விட்டு, பின்னர் கூடுதலாக வேறு இரண்டு பாடங்களை எழுதுமாறு கட்டாயப்படுத்தக் கூடும்.

இந்திய அமைப்புகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு களைப்பாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட புதிய மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

அப்போது வலுவில்லாத பல இந்திய அமைப்புகள், போராடியது போதும் என்று தங்கள் உற்சாகத்தை இழந்திருக்கக் கூடும்.

எனவே, 12 பாடம் என்று சத்தமாகக் குரல் எழுப்புவதை விட, நமது உரிமைக்கு நிரந்தரமாக பாதிப்பு வராத வகையில் கோரிக்கை எழுப்ப வேண்டும்.

தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் மாணவர்கள் எடுப்பதற்கு எந்த ரூபத்திலும் தடை எழக் கூடாது என்ற கோரிக்கையையும் சேர்த்து எழுப்ப வேண்டும்.

இன்னொரு காரியத்தையும் கவனியுங்கள்.

எஸ்பிஎம் சோதனையில் நன்னெறி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்திய மாணவர்கள் இந்தச் சோதனையை எடுத்து வருகின்றனர். ஆனால், அதில் எந்தப் பயனும் உண்டானதாகத் தெரியவில்லை. அடி, உதை, வெட்டு, குத்து என்று எல்லா கெடுதலான செயல்களும் நமது சமுதாயத்தில் தலைதூக்கி நிற்கின்றன. இதற்கு மகுடம் சூட்டுவது போல் மஇகா நிர்வாகித்து வரும் கூட்டுறவு கழகப் பொதுக் கூட்டத்தில் நடைபெற்ற குண்டர் கும்பல் அராஜகத்தைக் குறிப்பிடலாம். பத்திரிகைச் செய்தியைப் பார்த்தால் பள்ளிப் பருவ மாணவர்களே புத்ரா டீசட்டைகளை அணிந்து அராஜகத்தில் ஈடுபடுவதையும் போலிசார் தடுத்து வைத்திருப்பதையும் காணலாம். இந்த நன்னெறி பாடம் சமுதாயத்திற்கு எந்தப் பயனையும் கொண்டு வரவில்லை என்றுதான் சொல்கிறேன். இப்படிப் பயனில்லாத ஒரு பாடத்தைத் தேர்வில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா?

வருகின்ற 12.12.09ல் சனிக்கிழமை தோட்ட மாளிகையில் கூடுகிற தமிழார்வளர்கள் இதனையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புதன், 2 டிசம்பர், 2009

தமிழ்த் தாயைத் தீண்டாதே

தண்ணீரிக் கடியில் தூங்கிக் கொண்டிருந்த திமிங்கலத்தின் காதில் ஒரு சந்தடி.

திமிங்கலம் கண் விழித்து சுற்றும் முற்றும் பார்த்தது. காதை நாலா திசையும் திருப்பியது.

தமிழ் இலக்கியப் பாடத்திற்கு ஒரு தொல்லை.


எஸ்பிஎம் சோதனையில் மாணவர்கள் 10 பாடம் மட்டுமே எடுக்க முடியும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பினால் இந்திய மாணவர்கள் இந்தப் பாடத்தில் எடுக்க முடியாத சூழ்நிலை. தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரிரு மாணவர்கள்தாம் இப்பாடத்தை விரும்பி எடுத்து வந்தனர். அப்படியிருந்தும் ஆண்டு தோறும் ஆயிரம் மாணவர்கள்தாம் தேசிய நிலையில் இப்பாடத்தை எடுக்க முடிந்தது.

1982ம் ஆண்டில் கோலாலம்பூர் ராஜா அப்துல்லா பள்ளியில் இந்தச் சோதனையை எடுத்த ஒரே மாணவன் நான் மட்டும்தான். அப்போது மு.வ எழுதிய கரித்துண்டு என்ற நாவலை வாசித்து, ஏதோ எனக்குத் தெரிந்தவற்றை எழுதினேன். கற்றுக் கொடுப்பதற்கு ஆசிரியர்கூட இல்லை. மலேசிய சோதனை வாரியம் மாணவரிடம் எதை எதிர்பார்க்கிறது என்று தெரியாமல், எனக்குத் தெரிந்ததை எழுதி எட்டு என்ற கிரேட்டை எடுத்தேன். ஆனால், அதுவே எனக்கு மற்ற இலக்கியங்களை வாசித்து அனுபவிக்கும் பாக்கியத்தைத் தூண்டியது.

1990ம் ஆண்டுக்குப் பிறகு மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பாடத்தை ஆங்கிலத்தில் அல்லது மலாய் மொழியில் மட்டும்தான் படிக்க முடியும் என்ற ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அப்போது பகாங் மாநில மணிமன்றச் செயலாளராக இருந்த நான் பகாங் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பலைகளைக் கிளப்பி விட்டேன்.

அறிவியலையும் கணிதத்தையும் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்க வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கம் 2003வது ஆண்டில் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து பல கட்டுகரைகளை ஓர் இணையத் தளத்தில் எழுதி வந்தேன். எதற்கும் மசியாத மகாதிர் அரசாங்கம் அதனைச் செயல்படுத்தி, தாக்குப் பிடிக்க முடியாமல் இப்போது யு-டர்ன் எடுத்துக் கொண்டிருக்கிறது. பல கோடி ரிங்கிட் நஷ்டமானதுதான் மிச்சம்.

ஏன் எங்கள் உரிமைகளைப் பரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? இப்படிச் செய்வதால் நீங்கள் எப்படி லாபம் அடையப் போகிறீர்கள்? இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைச் சோதனைப் பாடமாக எடுத்தால் உங்களுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது? இந்தப் பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது?

2006ம் ஆண்டில் எஸ்பிஎம் சோதனையில் 16 பாடங்களை எடுத்த ஒரு மலாய் மாணவர் எல்லா பாடங்களிலும் ஏ எடுத்த பிறகு, சில சலசலப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இது போக கண்ணுக்குத் தெரியாத சில பாதகங்களை அரசாங்கம் உணர்ந்திருக்கலாம். ஆனால், இந்தப் பாட எண்ணிக்கைக் கட்டுப்பாடு எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

இந்திய சமுதாயத்திற்கு இதனால் பல பாதிப்புகள்.

1. மலேசிய மண்ணின் மனம் கமழும் தமிழ் இலக்கியவாதிகளை இனி நாம் காண முடியாது.
2. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் டிக்கெட் வாங்குவதற்கு இந்தப் பாடம் பலருக்குக் கைகொடுத்தது. இனி அதுவும் இல்லாமல் போகும். எனவே, தமிழாசிரியர்களின் பற்றாக்குறை ஏற்படப் போகிறது.
3. தமிழ்த் தகுதி இருந்தாலும் இலக்கியப் பால் அருந்தாத ஆசிரியர்கள்தாம் இனி தமிழ்ப் பள்ளிக்கு வருவார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் வெறும் கடமைக்காக மட்டும் தமிழையும் பிற பாடங்களையும் மாணவர்களுக்குப் போதிப்பார்கள். அறிவியல் ஆனாலும் சரி, கணிதம் ஆனாலும் சரி, ஆசிரியர்கள் நிச்சயம் இலக்கியப் பண்புகளை இப்பாடங்களில் திணிக்க முடியாது. விளைவு... இயற்கையின் அழகையும், தேசப் பற்றையும், மனித நேயத்தையிம் உள்வாங்கிக் கொள்ள முடியாத ஒரு வெற்று சமுதாயம் உருவாகப் போகிறது.

காலத்தின் கட்டாயத்தால் இந்த பிளாக்கரை உருவாக்கியிருக்கிறேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் உங்கள் கருத்தை இங்கு எழுதுங்கள். இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை நான் அறிவேன். தமிழ் ஆர்வலர்கள் பலர் தமிழ் யுனிகோர்ட் எழுத்தில் டைப் செய்ய முடியாத பிரச்சனைதான் அது. இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நானே ஓர் ஆலோசனையை வழங்குகிறேன். உங்களுக்குப் பழக்கமான செயலியைப் பயன்படுத்தி, டைப் செய்து அந்த ஆவணத்தை எனக்கு இணைப்பாக (attachment) அனுப்புங்கள். எனது மின்னஞ்சல் முகவரி rawangjohnson@yahoo.com என்பதுதான்.

ஏறக்குறைய எல்லா விதமான செயலியிலும் உருவான ஆவணங்களை வாசிக்கக்கூடிய வகையில் என்னுடைய கணினியைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறேன். உங்களால் டைப் செய்ய முடியாவிட்டாலும் கையில் எழுதி, அதனை ஸ்கேன் செய்து எனக்கு அனுப்புங்கள். ஆங்கிலத்திலும், மலாயிலும், சாக்கடைத் தமிழிழும் (romanized Tamil) எழுதிகூட அனுப்பலாம். உங்கள் கருத்துகள் உங்கள் பெயரிலேயே பதிக்கப்படும். புனைப் பெயரில் எழுதுகிறவர்களும் தாராளமாக எழுதலாம். உங்கள் புனைப் பெயரிலேயே அவற்றைப் பதிப்பிப்பேன். உங்கள் மனக் கசப்புகளை அரசாங்கம் புரிந்து கொள்ளட்டும்.

இன்னும் கொஞ்ச காலத்திற்குத் திமிங்கலம் தூங்காமல்தான் இருக்கும். தமிழ் இலக்கியத்திற்கு விடிவு காலம் பிறக்கும் வரை....