புதன், 27 ஜனவரி, 2010

புகைப்படத் தொகுப்பு


தமிழுக்காக உண்ணாவிரம்

எஸ்.பி.எம். தேர்வில் தமிழ், இலக்கியப் பாடங்கள் மற்ற பாடங்களுக்கு இணையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து தமிழ், தமிழ் இலக்கிய மீட்புக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
 
எதிர்வரும் தைப்பூச நாளன்று நாடெங்கிலும் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாக்களின்போது போராட்டவாதிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

 அண்மையில் தமிழ், தமிழ் இலக்கியம் குறித்துக் கல்வி அமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படுகிறது.

“இந்தப் போராட்டம் நாடெங்கிலும் தைப்பூச நாளன்று ஒரே நேரத்தில்    நடைபெறும் என்று போராட்டக் குழுவின் தலைவர் ஆ. திருவேங்கடம் தெரிவித்தார். பத்துமலை தைப்பூச விழாவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.இக்குழுவினர் தமிழ்க் கடவுள் முருகனுக்குத் தமிழ்க் காவடி எடுக்கவுள்ளனர்.
 
உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை மணி 3  வரை  மற்றும் பால் குடம் 3.30 க்கு மீட்புக் குழுவினர் சார்பாக எடுக்கப் படுகின்றது. பொது மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இணைந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.