வியாழன், 4 பிப்ரவரி, 2010

நாசிர் நாக்கில் நச்சு

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்
தீரா விசிரிப்பதே மெய்

நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த நாசிரின் நாக்கில் இருந்து என்ன விதமான நச்சு சுரந்தது என்று தெரியவில்லை. எல்லாம் மக்கள் பேசிக் கொண்டதுதான்.

இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தார்களாம்
சீனர்கள் உடலை விற்க வந்தார்களாம்

இப்படிதான் குறுஞ் செய்திகள் கைப்பேசிக்குப் கைப்பேசி மின்னலாகப் பாய்ந்து சென்றன.

மலேசியா இன்று என்ற அகப்பக்கத்தில்கூட அவர் இப்படித்தான் சொன்னார் என்று கூறவில்லை. ஆனால் அவர் பேசியது தொடர்பான கண்டனக் குரல்களைத்தான் பார்க்க முடிந்தது. உங்களுக்கு விருப்பம் என்றால் பின்வரும் தொடுப்பைச் சொடுக்கிப் பாருங்கள்....
http://www.malaysiaindru.com/?p=31904

மூடனை உரலிலே போட்டு நொய் நொய் என்று புடைத்து எடுத்தாலும் அவனுடைய மூடத்தனம் போகாதாம். நாசிரையும் இவர்கள் பட்டியலில்தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியர்களும் சீனர்களும் அளவுக்கு அதிகமான உரிமைகளைக் கேட்கிறார்கள் என்றும், நம்முடைய வரலாறு கேவலத்தின் சுவடுகள் என்றும் அதனால் நாம் எந்த உரிமைகளையும் கேட்கக் கூடது என்றும் அவர் பேசியதாக அறியப்படுகிறது.

இவர்கள் எல்லாம் மிகவும் கௌரவமான வழியில் இந்நாட்டை சுதந்தரித்துக் கொண்டார்கள் என்ற நினைப்பால், அரசாங்கம் வாரி வாரி வழங்கியதில். நாசிரைப் போன்ற சிந்திக்கத் தெரியாத முட்டாள்கள் எல்லாம் பல்கலைக் கழகம் வரைக்கும் சென்று பட்டம் வாங்கி விட்டதால்  நாம் இந்த இழிச் சொல்லையும் கேட்க வேண்டும், இன்னமும் மற்ற முட்டாள்களின் புலம்பல்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த முட்டாள்தனமான கூற்றுக்கு நமது எஸ்பிஎம் 12 பாட மீட்புக் குழுவின் கோரிக்கை தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது இந்தியர்களும் சீனர்களும் இந்தப் பிரச்சனையைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சான்றோர் சபையில் அமர்ந்திருக்கும் மூடனே, உன்னிடம் கேட்கிறேன்.

இந்தியர்கள் எத்தனை பேர் இந்நாட்டுக்குள் பிச்சைக்காரர்களாக வந்தார்கள் என்ற புள்ளி விபரம் உன்னிடம் இருக்கிறதா? அப்படி என்றால் பட்டியல் போட்டுக் காட்டு. ஒவ்வொரு வருடமும் எத்தனை இந்தியப் பிச்சைக் காரர்கள் வந்தனர்?  அவர்கள் எங்குச் சென்று பிச்சை எடுத்து தங்கள் பிள்ளைகளை இந்த அளவுக்கு வளர்த்து விட்டார்கள்? அப்படி வளர்ந்தவர்களில் எத்தனை பேர் உன்னைப் போல் முட்டாள்தனமான கோரிக்கையை அரசாங்கத்திடம் கேட்கிறார்கள்?

பதில் சொல்? இல்லை என்றால் சத்து மலேசியாவின் Nombor Satu முட்டாள் என்பதை நீ ஒத்துக் கொள்.

3 கருத்துகள்:

  1. //பதில் சொல்? இல்லை என்றால் சத்து மலேசியாவின் Nombor Satu முட்டாள் என்பதை நீ ஒத்துக் கொள். //

    இந்த நாட்டின் வளப்பத்திற்கு நம் மக்கள் அளித்துள்ள பங்களிப்பை பலரும் மறுத்து - திரித்து - மறைத்து கூறுவதற்குக் காரணம், கடந்த 20 ஆண்டுகளாகத் தவறான வரலாறு மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டதுதான்.

    அவ்வளவு ஏன்? நமது இளையோர்களுக்கே நமது வரலாறு தெரியாமல் இருக்கிறது. எங்கே போய் முட்டிக்கொள்வது????

    பதிலளிநீக்கு
  2. malaysia for malaysian not for one or one malaysia,malaysia for all,not only for umno

    பதிலளிநீக்கு
  3. நாம் அனைவரும் மலேசியர்கள்... அடிதட்ட மக்கள் ஒற்றுமையாக இருக்கும் போது சமுதாயத்தின் முதுகெலும்பாய் விளங்கும் தலைவர்கள் இவ்வாறு பேசுவது முறையன்று. இது அடிதட்ட மக்களிடையே விஷக்கிருமி போல பரவி ஒற்றுமையையே சீர்குலைத்துவிடும்.

    பதிலளிநீக்கு